நடுரோட்டில் சாகசம் செய்த நபரை மாமியார் வீட்டில் டிராப் செய்த காவல்துறை  

32
Advertisement

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின்  கௌதம் புத் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ராஜீவ்,இணையவாசிகளை கவர தன் சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,ஆபத்தான முறையில், இரு கார்கள் ஒருசேர ஓடிக்கொண்டு இருக்க,கார்களின் மேல் இரு கால்களை தனித்தனியே வைத்து நின்றபடி சாகசம் செய்கிறார்.பின்பு பைக் உடனும் சாகசம் செய்து .இதன் மூலம் சமூக வலைத்தளத்தில்  பிரபலமடைய விரும்பிய அவருக்கு தெரியாது.அவர்  ஊடகத்தில் பிரபலமடையுவார் என.

 இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டதையடுத்து,பரபரப்பான சாலையில் ராஜீவ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும், பைக்கில் சாகசம் செய்வதன் மூலம், அவர் தனது உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைத்தார். அவர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.வீடியோவை உருவாக்க பயன்படுத்திய இரண்டு எஸ்யூவிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.