வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை – வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ்

45

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். 2021-22-ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை 20ஆம் தேதி வரை 2.3 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2 நிதியாண்டுகளில் கொரோனா காரணமாக, வருமான வரி கணக்குளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் பரவிய நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். எனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.