முத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதி..!

295
kiss
Advertisement

வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதி, புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி போன்ற பெயர் பலகைகளை பொது இடங்களில் பார்த்திருப்போம். அதேபோல் சுவரொட்டி ஓட்டக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது என்று சுவர்களில் எழுதி வைத்திருப்பதையும் பார்த்திருப்போம்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சற்று வித்தியாசமான பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மும்பை புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் முத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதி என எழுதி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மும்பை புறநகர் பகுதியான போரிவலியில் சத்யம் சிவம் சுந்தரம் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் மற்றவர்கள் முகம்சுளிக்கும் வகையில் சில இளம் தம்பதிகள்  முத்தமிட்டு கொஞ்சியபடி இருந்துள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அனைவருக்கும் எரிச்சலூட்டுவதாக இருந்தது.

இதைப்பார்த்த குடியிருப்புவாசிகள் என்ன செய்வதென்று தெரியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் முத்த தம்பதிகள் மீதான புகாரை கண்டுகொள்ளவில்லை.

இதனையடுத்து முத்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குடியிருப்புவாசிகள் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்தினர். அந்த திட்டம்தான் பெயர் பலகை.

குடியிருப்பு வளாகத்தில் ஆங்காங்கே “முத்தம் கொடுக்க தடை செய்யப்பட்ட பகுதி” என்று பெயர் பலகைகளை வைத்தனர். மேலும், சுவர்களிலும் எழுதி வைத்தனர்.

No kissing zone இப்போது  selfie zone ஆக மாறி உள்ளது. No selfie zone என்று எழுதி வைப்பார்களா என்று தெரியவில்லை.

This Housing Society In Mumbai Put Up 'No Kissing' Boards To Discourage PDA
No kissing zone': Housing society in Mumbai puts up sign to discourage  public displays of affection - India News
Mumbai Housing Society Paints 'No Kissing Zone' Sign for Couples Getting  Intimate