“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச் செலவினங்களும், முதலீடுகளை அதிகரித்தலும் தொடர்ந்து துணைபுரியும்”

413

சீனா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2022ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் நிதி ஒத்துழைப்பு அறிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனுபவங்கள் குறித்து உரையாடுதல், பரிமாறிக்கொள்ளுதல், நீடித்த வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகளை தெரிவித்தல் ஆகியவற்றில் பிரிக்ஸ் அமைப்பு தொடர்ந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். Online Advertising: Professional SEO Services www.seopaslaugos.com

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச் செலவினங்களும், முதலீடுகளை அதிகரித்தலும் தொடர்ந்து துணைபுரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.