சிறுவனுக்கு கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி

41
Advertisement

நீங்க ஸ்கூல் படிக்கும்போது  நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி இருந்த சொல்லுகபாப்போம்.அது இந்த சிறுவனுக்கு நடந்ததை விட அதிர்ச்சி சம்பவமாக இருக்குமான்னு.

பிரேசிலைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு  அவன் படிக்கும் பள்ளியில் மறக்கமுடியாத அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துருக்கு,அந்த சிறுவனுக்கு கால்பந்து விளையாட்டுனா ரொம்போ பிடிக்கும்,இதனால் ஆர்வத்துடன்  பள்ளியில் கால்பந்து  போட்டிகளில் கலந்தவுகொள்வது வழக்கம்.

Advertisement

அதுபோன்று, பள்ளியில் கால்பந்து போட்டி  ஒன்றில் கலந்துகொண்டு இருந்தார்.ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது.பின்பு இடைவேளையில் கழிவறை சென்று வரலாம் என சென்றுள்ளான் அந்த சிறுவன்.வழக்கம்  போலோ சென்ற அவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

அவன் கழிவறை அறைக்குள் சென்றபோது,​​ஒரு அறைக்குள் ஜாகுவார் மறைந்திருப்பதைக் கண்டு ஒரு நிமிடம்  உறைந்து நின்றார்.பின்பு பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்த சிறுவன்,நேராக பள்ளிக்கு விளையாட்டை காணவந்த தன் தந்தையிடம் சென்று இதை தெரிவித்துள்ளான்.

தகவல் கொடுக்கப்பட்டு விரைவில், உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர் மற்றும் குளியலறையில் மறைந்திருந்த ஜாகுவாரை சில முயற்சிக்கு பின் பிடித்தனர்.பிடிபட்ட ஜாகுவார் மீண்டும் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது.

இது குறித்து மைகல் என்ற சிறுவன் கூறுகையில் , ‘ஜாகுவாரைப் பார்த்து நான் நடுங்க ஆரம்பித்தேன்.அது என்னை பார்த்து உறும  ஆரமித்தது.என் இதயம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது எனவும் சிறுவனின் தந்தை கூறுகையில்  முதலில் அது காட்டு நாயாக இருக்கும் என்று நினைத்தேன்.பின்பு தான் தெரிந்தது, அது நாய் அல்ல ஜாகுவார் என்று.உடனே நான் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன் என தெரிவித்தார்.

பிடிபட்டது பெண் ஜாகுவார் என்றும் அதுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என  தெரிவித்த மருத்துவர்கள்  காடுகளை அழிப்பதால், தற்போது வன விலங்குகள் நகர்ப்புறங்களுக்கு வருகின்றன.காட்டை அழிப்பது ,  காட்டுத் தீ மற்றும் இந்த விலங்குகளின் இயற்கை வாழ்விடத்தை அழிப்பதால் இது நடக்கிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.