கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை

403
Nilgiris
Advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கைதக்கொல்லி கிராமத்தில் காட்டு யானை புகுந்துள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, கதிர்வேல் என்பவரின் வீட்டை உடைத்து, வீட்டில் இருந்து பொருட்களை சூறையாடியுள்ளது.

மேலும் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயையும் காட்டு யானை தாக்கிக் கொன்றுள்ளது.

காட்டு யானை நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இரவு நேரங்களில் கிராம பகுதியில் உலா வரும் காட்டு யானையை பிடித்து, முதுமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.