பணியில் மெத்தனமாக செயல்பட்ட ஊழியர்கள் இடைநீக்கம்

251

நீலகிரியில் கடந்த ஒரு ஆண்டாக அரசு பணியில் மெத்தனமாக செயல்பட்ட இரண்டு ஊழியர்களை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவணங்களை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் நேற்று முன்தினம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதேபோல், பழங்குடியினர் மக்களுக்கு பசுமை வீடு கட்டி தருவதில் முறைகேடு செய்து, பணியில் மெத்தனமாக செயல்பட்ட பொன்மொழி என்பவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.