நியாய விலைக் கடையின் கதவை உடைக்க முயற்சித்த கரடி

349

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வனப்பகுதி ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் ஊருக்குள் வந்த கரடி நியாய விலைக் கடையின் கதவை உடைக்க முயற்சித்தது.

இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்தனர்.

இதனால் இப்பகுதி மக்கள் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.