தமிழகத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் NIA அதிகாரிகள் தீடீர் சோதனை நடத்தி வருகின்றனர்…

21
Advertisement

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 

  இதனை தொடர்ந்து அந்த அமைப்பின்  தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.   இதனையடுத்து பல்வேறு நிர்வாகிகளை அழைத்துச் சென்ற அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினர்.  குறிப்பாக மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியும், முன்னாள் SDPI கட்சி நிர்வாகியுமான அப்பாஸ் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை முதலாக சோதனை நடத்தினர். 

பின்னர் அப்பாஸ் என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.  மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடு சோதனையின் போது சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.   இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.