பரவி வரும் புதிய வகை காய்ச்சல்

268

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் உயிரிழந்தார்.

இந்த காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவியது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு நைல் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றும் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய வகை காயச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.