மோரில் உப்புக் கலந்து குடிப்பது தவறு மருத்துவர்கள் சொன்ன புதிய செய்தி

207
Advertisement

தற்போது ஒரு சில நாட்களாகத் தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பம் மக்களைச் சுட்டெரிக்கிறது என்றே சொல்லாம்,

அந்தளவிற்குக் கோடையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, எனவே அதீத வெப்பத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்க மக்கள் பல்வேறு பானங்களைக் குடித்து வருகின்றனர்.
அதில் எளிதாகத் தயாரிக்கக்கூடிய பானமாக மோர் இருக்கிறது, ப்ரோட்டீன் கால்சியம் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது, எலும்பு ஆரோக்கியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல நன்மைகளும் மோர் குடிப்பதால் நமக்கு கிடைக்கின்றது, மோரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமுள்ளது,


அதுபோல பலர் உணவு செரிமானம் ஆக வேண்டும் என்று சப்பிட்டப் பிறகு மோர் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள், மேலும் மோரின் சுவையை அதிகரிக்க நாம் காலகாலமாக உப்பு சேர்க்கிறோம், ஆனால் இது மிகப் பெரிய தவறு என்று முன்னணி மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார், மோரில் உப்பு சேர்த்து குடிப்பது வயிற்றுக்குத் தீங்கு விளைவிக்கும் என அறிவுறுத்துகிறார், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், மோரில் உப்பு சேர்த்து குடிப்பதால், எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம், இருப்பினும் உப்பு சேர்க்காமல் மோர் குடிப்பது பல நன்மைகளைத் தருவதாக கூறுகிறார்.


தயிரைப் போலவே மோர் மற்றும் லஸ்ஸி உள்ளிட்ட பானங்கள் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நன்மை செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் சுவைக்காக மோரில் உப்பு சேர்ப்பது ப்ரோபயாடிக்ஸ்களின் செயல்பாடு மற்றும் செயல்திறனைக் குறைக்கிறது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிக்கிறது. எனவே மோரில் உப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் பிரச்சனை உள்ள நபர்கள் மோர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மோர் குடித்தாலும் அலர்ஜி ஏற்படும்.