செவ்வாய் கிரகத்தில் தென்பட்டதா தண்ணீர்?

389
Advertisement

ஐரோப்பிய விண்வெளி முகைமை 2003ஆம் ஆண்டில் இருந்து செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் செயற்கைக்கோளை கண்காணித்து, அவ்வப்போது புதிய தகவல்களை அரிய புகைப்படங்களோடு அளித்து வருகிறது.

அண்மையில், வெளியிட்டுள்ள புகைப்படத்தில், நிலத்திற்கு மேலே உயர்ந்து நிற்கும் அமைப்பில் பல வழிப்பாதைகள் சுழலும் வடிவில் காணப்படுகின்றது.

இந்த தடங்களில் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நீர் ஓடியிருக்க கூடும் என ஐரோப்பிய விண்வெளி முகமை கணித்துள்ளது.

இந்த அமைப்பு மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் உள்ள அமைப்போடு பொருந்தி போவதாகவும், இதனால் பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் ஆன ஒற்றுமைகள் நாம் நினைப்பதை விட அதிகம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.