பயணிகளுடன் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

442

நேபாள நாட்டின் போகாராவில் இருந்து 22 பேருடன் சென்ற தாரா ஏர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாயமானது.

விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த13 பேர், 4 இந்தியர்கள் உள்ளிட்ட 22 பயணிகள் பயணம் செய்தனர்.

மாயமான விமானம் சனோஸ்வெர் என்ற மலைப்பகுதியில் மாயமானது தெரியவந்தது.

இந்த நிலையில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தின் புகைப்படத்தை நேபாள ராணுவம் வெளியிட்டுள்ளது.