இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

105

நெல்லை அருகே, இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்க்காவுக்கு கடையநல்லூரை சேர்ந்த தம்பதியினர் குழந்தையுடன் வந்துள்ளனர்.

சாகுல் ஹமீது – ராகூர் மீரா தம்பதியினர் இரண்டரை வயது பெண் குழந்தை நஜிலா பாத்திமாவுடன் தொழுகைக்காக நேற்றிரவு பள்ளிவாசல் தங்கியிருந்தனர்.

Advertisement

காலையில் எழுந்து பார்த்தபோது, குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கூடன்குளம் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த  போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், கடத்தப்பட்ட குழந்தையை தேடி வருகின்றனர்.