போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை – போக்குவரத்துக் கழகம்

122

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஊதியம் ஒப்பந்தம் தொடர்பான போச்சுவார்த்தையை இறுதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் 3ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கப் போவதாக சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், வரும் 3ஆம் தேதி ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, போக்குவரத்து கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள, மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். கொரோனா விதிகளை பின்பற்றி ஒவ்வொரு தொழிற்சங்கத்திற்கும் ஒருவர் மட்டும், பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.