நீட் தேர்வு – விண்ணப்பித்தவர்களின் விபரம்

534

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS. BDS படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

2022-23கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தொடங்கியது.

பின்னர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இவர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 பேர் ஆண்கள் என்றும், 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 பேர் பெண்கள் எனவும், 12 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்றும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 2 லட்சத்து 57 ஆயிரத்து 562 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாகவும், தமிழ் மொழில் தேர்வு எழுத 31ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.