நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றும், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கை பெற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
நீட் தேர்வு பற்றி ஆராய்ந்த நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு அறிக்கையை பரிசீலித்து மசோதா கொண்டு வரப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.