திருப்பூர் அருகே, கழிவறையின் மத்தியில் உள்ள  மின்கம்பத்தை மாற்ற வேண்டும் அல்லது கழிவறையை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்…

34
Advertisement

திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக் கழிவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய கழிவறைக்கு அருகாமையில் புதியதாக கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிய இடத்தில் கழிவறை கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில்  உயர் அழுத்த மின்கம்பம் இருப்பதன் காரணமாக பொதுமக்கள் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மின் கம்பத்தை அகற்ற வேண்டும் இல்லையெனில் கழிவறையை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.