மன்னார்குடி அருகே, கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

55
Advertisement

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள திருப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஹரிஷ், சோழங்கநல்லூர் கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்காக மின் விளக்களை இணைத்துகொண்டு இருந்தான்.

அப்போது மின்சாரம் தாக்கியதில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மாணவன் ஹரிஷ், பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.