கோவை  அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

25
Advertisement

கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் – காயத்ரி தம்பதியினர்.

இவர்களுக்கு வர்ஷிகா, வர்ணிகா என்ற ஒரு வயதான இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், காயத்ரி,  வீட்டை சுத்தம் செய்து விட்டு, பாதியளவு தண்ணீருடன் பக்கெட்டை வீட்டின் ஒரு அறையில் வைத்துவிட்டு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அறையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வர்ஷிகா, தண்ணீர் பக்கெட்டுக்குள்  தவறி தலைகீழாக விழுந்துள்ளார். 

இதனையடுத்து, காயத்ரி தண்ணீரில் முழ்கிய குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்தாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.