நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்

516
Advertisement

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.