34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

232
Navjot-Singh-Sidhu
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவால் கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரியானா ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணையில் சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் நவ்ஜோத் சிங் சித்து மேல்முறையீடு செய்தார்.

இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அந்த தீர்ப்பில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.