நேஷ்னல் ஹெரால்டு வழக்கு – சோனியா காந்தி இன்று ஆஜராகமாட்டார்

272

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேஷ்னல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனப் பங்குகளை, யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல்காந்தி இருவருக்கும், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சோனியா காந்தி, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். எனவே, நேஷ்னல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி இன்று ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி வெளிநாட்டில் உள்ளதால், அவர் மற்றொரு நாளில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.