நேஷனல் ஹெரால்டு வழக்கு – ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு

183

நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, டெல்லி-காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து  ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை யங் இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆஜராகும் முன் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், அங்கிருந்து, அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பேரணியாக சென்றனர்.

திடீரென, பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை காவல்துறையினர் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், பேரணியாக செல்ல அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் உத்தரவிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நபர்களுடன் சென்று ஆஜரானார்.