நேஷனல் ஹெரால்டு வழக்கு – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு இன்று ஆஜர்.

220

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக உள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் ஆஜராக அமலக்காத்துறை 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி, கொரோனாவில் இருந்து முழுமையாக குணமாகும் வரை கால அவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து சோனியா காந்தி ஜூலை 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதன்படி, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.