நேஷனல் ஹெரால்டு வழக்கு – நாடு முழுவதும் காங்கிரசார் சார்பில் சத்தியாகிரஹ போராட்டம் என அறிவிப்பு.

38
Advertisement

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் சார்பில் சத்தியாகிரஹ போராட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து, சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்ற அனுப்பியது. அதன்படி, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜராகும்போது அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும், அமைதியான முறையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் டெல்லி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி-க்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், காங்கிரஸ் கட்சி துவக்க உள்ள நாடு தழுவிய பாதயாத்திரை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது