ஏமாற்றம் அடைந்த நக்மா

343

காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால், காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இது தொடர்பாக நக்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால் விரக்தி அடைந்த நக்மா, மகாராஷ்டிராவில் இருந்து தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ள இம்ரானை விட எனக்கு எந்த விதத்தில் தகுதி இல்லை எனவும் சாடியுள்ளார்.

மேலும் 2004ஆம் ஆண்டு காங்கிரசில் சேரும் போது தனக்கு மாநிலங்களவை எம்.பி பதவி கொடுக்கப்படும் என சோனியாகாந்தி உறுதியளித்ததாகவும் நக்மா குறிப்பிட்டுள்ளார்.