மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்

43

நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழ்ப்பட்டினச்சேரி மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.