இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துகொள்ளப்போகிறார்

116
Advertisement

மிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்தார் .இதுகுறித்து அவரது சமீபத்து பேட்டியில், தனிப்பட்ட முறையில் விவாகரத்து கூடாது என்பதுதான் எனது எண்ணம். என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பேன். நான் மறுமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

அடுத்து நான் திருமணம் செய்தாலும் குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமாகத்தான் அது இருக்கும். திருமணம் செய்து கொள்ளும் பெண் எனது குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும், விதவை அல்லது விவாகரத்து செய்த பெண்ணாகவும், குழந்தை இருக்கும் பெண்ணாகவும் பாருங்கள் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளேன். குழந்தை இருக்கும் பெண்தான் எனது குழந்தைகளையும் தனது குழந்தைபோல் பார்த்துக் கொள்வார்” என்றார்.