தாய், மகள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

118

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே முட்டம் பகுதியில் கடந்த 7 ஆம் தேதி பவுலின் மேரி மற்றும் அவரது தாய் இருவரையும் மர்ம நபர் அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் முக்கிய தடயமான மங்கி குல்லா படத்தை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

குல்லாவுடன் நடமாடியவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கபடும் எனவும் குளச்சல் சரக காவல்துறை அறிவித்து உள்ளது.