மாமூல் கேட்டு ரவுடிகளால் வெட்டப்பட்ட மளிகை கடை உரிமையாளர்

37

தஞ்சையில் மாமூல் கேட்டு ரவுடிகளால் அரிவாளால் வெட்டப்பட்ட மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை கரந்தை பகுதியில் கடந்த 10 ஆம் தேதி இரண்டு இளைஞர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, கடைகளில் மாமூல் கேட்டுள்ளனர்.

அப்போது, மளிகை கடை உரிமையாளர் செந்தில்வேல் என்பவர், மாமூல் கொடுக்க மறுத்துள்ளார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள், செந்தில்வேலை அரிவாளால் வெட்டிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹரிகரன், தினேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்வேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் செந்தில்வேலின் உயிரிழப்பை கண்டித்து 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.