விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகிலுள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார்.
அவருடையை நண்பர் மணிகண்டன்.
அவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
இதனிடையே, சந்தனகுமாருக்கும், அவருடைய உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தனகுமார் மற்றும் அவருடைய நண்பரை, உறவினரான மணிகண்டன், அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.