தவறுதலாக கணக்கில் வந்த 7 லட்சத்தை லாட்டரியில் விழுந்த பரிசு என சமாளித்த நபர்

259
Advertisement

ஒருவரின்  வங்கி கணக்கில் தவறுத்தலாக  ஒரு ரூபாய் வந்துருந்தால் கூட  அதை நினைத்து  மகிழ்ச்சியடையும் பலர் உண்டு. இங்கே ஒருவருக்கு தவறுதலாக 7 லட்சம் ரூபாய் வந்துள்ளது.ஆனால் அந்த நபர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க.மும்பையில் வசிக்கும் பெண் ஒருவர்,அவரின் உறவினரின் வங்கி கணக்கிற்கு  7 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார்.

சற்று  நேரம் கழித்துதான் தெரிந்தது,அவர் வங்கி கணக்கின் எண்ணை தவறுதலாக போட்டுள்ளார்.அதனால் அந்த 7 லட்ச ரூபாய் மும்பையை சேர்ந்த மற்றொரு நபரின் கணக்கிற்கு  சென்றுவிட்டது.

இதை அறிந்தபின்,சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி உதவி கேட்டுள்ளார்.ஆனால் அந்த வாங்கியோ, இது உங்கள் தவறு,எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறிவிட்டது.அதையடுத்து சைபர் செல்லை அணுகினார் அந்த பெண்.

பெண் கொடுத்த தகவலின் பேரில்,விசாரணை நடத்தியதில், பணம் பெற்ற நபரும் மும்பையில் தான் உள்ளார் என்பது தெரியவந்தது.பின் அவரின் முழு விவரத்தை எடுத்து ,அவரின் கணக்கில் தவறுதலாக பெறப்பட்ட 7 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டபோது,அது எனக்கு லாட்டரியில் விழுந்த பரிசு பணம் என பணத்தை தர மறுத்துள்ளார்.

அதையடுத்து பணத்தை திரும்ப தரமுடியாது என்றால் வழக்கு பதிவுசெய்து,கடும்நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தபின்,அந்த நபர் பணத்தை திரும்ப தர ஒத்துக்கொண்டார்.அதன்படி,பணத்தை திரும்ப பெற, மும்பை காவல்துறையின் பலத்த பாதுகாப்பில்  பணத்தை  பெற்றார் அந்த பெண்.

ஜூன்  20 ஆம் தேதி சைபர் செல்லை அணுகி, ஜூலை 2 ஆம் தேதி அவரின் பணம் மீண்டும் கிடைத்தது.பணம் கிடைக்க உதவிய காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.