திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலத்தில் சில புதுமைகளை புகுத்த உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் கதவணை மற்றும் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 26ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பாலப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலம் கட்டும் பணியில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த பாலம் கட்டும் பணியில் பல புதுமைகளை புகுத்த உள்ளதாக தெரிவித்த அவர், அது என்னவென்று முதலமைச்சர் தான் கூறுவார் என்று கூறினார்.