இவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு

924

மாநிலங்களவையில் உள்ள பாஜக உறுப்பினர்களான சையத் ஜாபர் இஸ்லாம், எம்.ஜே. அக்பர், முக்தார் அப்பாஷ் நக்வி ஆகியோரின்  பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்த மூன்று பேருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அமைச்சராக உள்ள முக்தார் அப்பாஸ் நக்வி பதவியை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் அவர் உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.