எம்.ஆர்.விஜயபாஸ்ர் வங்கி லாக்கரை சோதனையிட முடிவு

409
mr vijayabaskar
Advertisement

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது. மேலும் அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான மற்றும் நெருக்கமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். சென்னை மற்றும் கரூரில் என அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர் வீடு, நண்பர் வீடு என 26 இடங்களில் அதிகாரிகள், போலீசார் என 130 பேர் துருவி துருவி சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த சொகுசு கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

26 இடங்களில் 15 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றியது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கரை சோதனையிட லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி பெயரில் எத்தனை லாக்கர் உள்ளது என்ற விவரத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை சேகரித்துள்ளது.

Advertisement

மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.