“பெகாசஸ் அறிக்கையை கிழித்து எறிந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட MP”

284
mp santanu sen
Advertisement

மாநிலங்களவையில் பெகாசஸ் அறிக்கையை கிழித்து எறிந்ததற்காக, கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாந்தனு சென், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாநிலங்களவையில் நேற்று “பொகாசஸ்” ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, தகவல் – தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்தார். அப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாந்தனு சென், அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை அபகரித்து, கிழித்து எறிந்தார்.

இந்த பிரச்சனை தொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட மாநிலங்களவைத்தலைவர் வெங்கையா நாயுடு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.சாந்தனு சென் இந்தக்கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் எம்.பி.சாந்தனு பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.