BJPயை எச்சரித்த கனிமொழி MP

258

பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்ததுதான் இந்தியா என்று கூறிய திமுக எம்.பி கனிமொழி, இந்தி திணிப்பு நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் “நவீனக் கல்வி கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன” என்ற நூலை கனிமொழி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, உயர் பதவியில் இருப்பவர்கள் கூட, எந்தவொரு நாடும் மதத்தை சாராமல் இருக்க முடியாது என்கிறார்கள்… மதத்தை சாராமல் எத்தனை நாடுகள் உள்ளன என்பது அவர்களுக்கு தெரியுமா என தமிழக ஆளுநரின் பெயரைச் சொல்லாமல் மறைமுகமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்ததுதான் இந்தியா என்றும் அதனை சிதைக்க நினைப்பது மிகப்பெரிய தவறு எனவும் கூறினார். இந்தி திணிப்பு நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது மட்டுமின்றி, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி தெரிவித்தார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ அண்ணாமலையை கூப்பிட்டு விசாரிக்கட்டும் என்றும் அதற்கு அவர் பதில் சொல்லட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.