மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வாக்குப்பதிவில் திடீர் திருப்பம்

692

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் திமுக சார்பாக 3 பேரும், அதிமுக சார்பாக இருவரும், காங்கிரஸ் சார்பாக ப.சிதம்பரமும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

போட்டி ஏற்பட்டுள்ள 16 இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஆகிய மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இதில் திடீர் திருப்பமாக கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமயிலான மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.ஸ்ரீனிவாச கவுடா, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கை பிடிக்கும் என்பதால் காங்கிரசுக்கு வாக்களி்த்ததாக சீனிவாச கவுடா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல மற்ற மாநிலங்களிலும் கட்சி மாறி எம்.எல்.ஏக்கள் வாக்களித்திருப்பது இன்று மாலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.