முதியவரிடம் குட்சியை எடுத்துத்தரும் சமத்து குரங்கு

42
Advertisement

குரங்குகள் என்றாலே சேட்டை தான்.காட்டில் வாழும் குரங்குகளை விட மனிதர்களிடம் தொடர்பில் உள்ள குரங்குகள் மனிதனை போலவே நடந்துகொள்ளும்.பாசம்காட்டுவது ஆகட்டும் , சொன்னதை செய்வதுவரை மனிதர்களிடம் நெருக்கமாக, வீட்டின் செல்லப்பிராணியாக கூட சிலர் குரங்குகளை வளர்ந்துவருகின்றனர்.

குரங்கின் நற்பண்பை பிரதிபலிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் உலாவருகிறது.இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், தோப்பில் குரங்கு ஒன்று சேட்டை செய்ததாக தெரிகிறது,அதை விரட்ட குட்சி ஊன்றியபடி இருந்த முதியவர் அருகே உள்ள சிறிய குட்சியை குரங்கின் மீது எறிந்துள்ளார்.

சேட்டைசெய்த குரங்கு சற்று அமைதியாக முதியவரின் முன் நிற்க,குரங்கின் மீது எரிந்த அந்த குட்சியை “எடுத்து தா..” என அந்த குரங்கிடமே கேட்கிறார் முதியவர்.இதை புரிந்துகொண்ட குரங்கு குட்சியை எடுத்து தலையில் வைத்து அவரின் அருகே சென்று சமத்தாக அதை முதியவரின் கையில் கொடுத்துவிடுகிறது.

Advertisement