அன்பிற்கு “மொழி” தேவையில்லை,இரு உள்ளங்கள் போதும் என்பதை உணர்த்தும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளம் மூலம் நம்மை ஈர்த்துவருகிறது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு வைரலாகிய வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அதில், வேட்டைக்காரர்களால் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட இரு சிம்பன்சி குட்டிகள் ,சில வருடங்களுக்கு பிறகு கடத்தல் காரர்களிடமிருந்து மீட்கப்பட்டு , பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்,அந்த இரு சிம்பன்சி குட்டிகளை சேர்த்து வைத்துள்ளனர் வனத்துறை.
இரு வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த சகோதரர்கள் சந்தித்தபோது ,முதல் பார்வையிலே வந்துள்ளது தன் சகோதரன் என தெரிந்துகொண்ட இரு குட்டிகளும் ஓடிவந்து “கட்டி பிடித்துக் கொள்கிறது”.
தாய் மற்றும் சகோதரனை பிறந்த இரு குட்டிகளும் கட்டி தழுவிக்கொண்ட காட்சி கண்களில் கண்ணீர் வரவைக்கிறது.பல ஆண்டுகள் முன் எடுக்கப்பட்டாலும் தற்போது மீண்டும் இந்த வீடியோ இணையத்தில் அனைவரின் இதயத்தை ஈர்த்துவருகிறது.