திருமண விழாவை  சீர்குலைத்த ராட்சஷ அலை

31
Advertisement

ஹவாய் தீவில் திருமணத்திற்காக செய்யப்பட்ட ஏற்பாட்டில் ராட்சஷ அலை புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.திருமண தம்பதி ஒன்று தங்கள்  திருமணத்தை சிறப்பாக கொண்டாட, கடந்த  சனிக்கிழமை அன்று ஹவாய் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள விடுதியில் திருமண முன் ஏற்பாடுகளை செய்துருந்தனர்.திட்டமிட்டபடி திருமண நிகழ்ச்சி சிறப்பாக சென்று கொண்டு  இருந்தது.

புல் தரையில்  சேர்கள் அமைக்கப்பட்டு அதில் தம்பதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, திடீரென கடல் அலை ஆக்ரோஷமாக எழுவதை  அவர்கள் அச்சத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில், ராட்சஷ அலை  சுவருக்கு மேலே பொங்கி நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குள் புகுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள், கூச்சலிட்டபடி பாதுகாப்பாக அறையை நோக்கி ஓடினர். இதுகுறித்து கூறிய திருமண தம்பதி ,”நல்ல வேலையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேஜைகளில் உணவு பரிமாறப்படுவதற்கு முன்னரே அலை உள்ளே நுழைந்துவிட்டது. இதனால் விருந்தினர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட உணவுகளும் சேதமைடையாமல் தப்பித்தது” என்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வைரலாகி வருகிறது.

Advertisement