உனக்கு அம்மாவை பிடிக்குமா ? அப்பாவை பிடிக்குமா ?- நாய் குட்டியின் பதில்

339
Advertisement

மனிதனின் உற்ற நண்பன் யார் என்று கேட்டால், சின்னஞ் சிறு குழந்தையும் சொல்லும் “நாய்” என்று.மனிதனுடனான இதன்  பிணைப்பு, “அன்பு” என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடுகிறது.

நாயின் அறிவு ஒரு குழந்தையின் அறிவோடு ஒத்துப்போவதாக சில ஆய்வுகளும் கூறுகிறது.இதனை நிரூபிக்கும் விதம் பல வீடியோக்கள் இணையத்தில் உலா வருகிறது.தற்போது மற்றொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை ஈர்க்கப்பட்டதை விட பலரையும் இந்த வீடியோ ஈர்த்து வருகிறது.இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில் , பெண் ஒருவர் அவரின் செல்ல நாய்க்குட்டியை மெத்தையில் படுக்கவைத்துள்ளார்.பெண்ணின் கணவரும் அருகே படுத்துள்ளார்.

பின்பு ,அந்த  நாயை பார்த்து  “லூனா, நீ யாரை அதிகம் நேசிக்கிறாய்?” அம்மாவையே ? அப்பாவையா ?  என கேட்கிறார்.அதற்கு அந்த நாய் குட்டி, சில  வினாடிகள் இருவரையும் பார்க்கிறது.

ஒருகட்டத்தில் தன் அம்மாவின் பிடியில் படுத்திருந்த நாய்,வேகமாக அப்பாவிடம் சென்று அவரிடம் அன்பை வெளிப்படுத்தியது.அதாவது அந்த பெண்ணின் கணவரை தான் அதிகம் நேசிக்கிறதாம் என்பது போல இந்த வீடியோ முடிகிறது

நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.