ஆற்றுப்பாலத்தின் தூணில் தொங்கியபடி பயணியின் செல் போனை பறித்த திருடன்

248
Advertisement

இரயில் பயணத்தின்போது திருடர்களிடம் இருந்து  நம் உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.பயணிகள் அலட்சியமாக இருக்கும் நேரத்தில் திருடிவிடுவர்.

இந்நிலையில் , இரயிலின் உள்ளே செல்லாமலே பயணிகளிடம் திருடுவது தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.அதாவது, திருடும் நபரோ அல்லது நபர்களோ இரயில் வரும் தண்டவாளத்தின் அருகே நின்று கொள்கின்றனர்.

பின்பு , இரயில் வரும் நேரம் பார்த்து,அருகே வந்து இரயிலின் படியில் உட்காந்து கையில் செல் போனை புடித்துருக்கும் நபர்களிடம் இருந்த ஒரு குட்சியோ ,கட்டையோ வைத்து  கை மீது தட்டுவார்கள் .கையில் அடிபட்டவுடன் அந்த பயணியும் செல் போனை கீழே விட்டு விடுவார்.

இந்நிலையில்,இதேபோல ஆற்றுப்பாலத்தில் இருக்கும் இரும்பு தூணின் மீது தொங்கியபடி படியில் இருந்த பயணியின் செல் போனை பறிக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.