மாநகராட்சி ஆணையர் வீட்டின் முன்பு குப்பையை கொட்டிய பாஜக MLA

garbage
Advertisement

கர்நாடக மாநிலம் பெலகா பகுதியில் குப்பைகளை அகற்றாததால், ஆத்திரம் அடைந்த பாஜக எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையர் வீட்டின் முன்பு குப்பையை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நீண்ட நாட்களாக குப்பைகளை அகற்றுவது தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெருநகராட்சி அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பாஜக எம்.எல்.ஏ, டிராக்டர் ஒன்றில் குப்பைகளை எடுத்துக் கொண்டு நகராட்சி ஆணையர் வீட்டின் முன் குப்பைகளை கொட்டியுள்ளார்.

மேலும், நகர் பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்ததாக ஆட்சியர் வீட்டின் அருகில் குப்பை கொட்டப்படும் என பாஜக எம்.எல்.ஏ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

garbage