இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவினர் பொய்களை கூறிவருவதாக குற்றம் சாட்டினார். மேலும் 410 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை ஆயிரத்து 200 ரூபாய்க்கு விலைஏற்றிய பாஜகவை கேள்வி கேட்க அதிமுகவிற்கு தைரியம் இல்லை என கூறினார். மேலும் ஊடகங்கள் உண்மையை அறியாமல் செய்தி வெளியிட வேண்டாம், தவறை சுட்டிக்காட்டுங்கள் அதை சரி செய்வோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தார்.