உதகையில்  முதல் முறையாக சுற்றுலாப்பயணிகளுக்கு,  வரும்  மே 13ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்…

105
Advertisement

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125 வது மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை என 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.

இதற்காக பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு, பிகோனியா, ஜெரேனியம் உள்ளிட்ட 325 வகையான ரகங்களில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் மலர்ந்து பூக்க துவங்கியுள்ளன. மேலும், அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதுகுறித்து பேசிய அமைச்சர், இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் முதல் முறையாக மே 13ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.