தளவாட உற்பத்தி 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியை எட்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை

48

2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியை எட்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், தனியார் துறையினர், இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று கூறினார். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆகியவையும் பாதுகாப்பு துறையுடன் கைகோர்த்து செயல்படுகின்றன என்றும், இது ஒரு பொற்காலம் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், 2025-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement