இரவு நேரத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

366
puducherry
Advertisement

புதுச்சேரியில், இரவு நேரத்தில் மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் இரவு நேரத்தில், நகரத்தின் முக்கிய பகுதிகளில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் உடனிருந்த மின் துறை அதிகாரிகளிடம் உடனடியாக எரியாத மின் விளக்குகளை சரிசெய்ய உத்தரவிட்டனர்.

Advertisement

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி நகரப்பகுதியில் நிறைய மின் விளக்குகள் எரியவில்லை என்று தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.