“தமிழகத்தில் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி”

205
college
Advertisement

மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள் போல் கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மற்றும் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிர் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் தோட்டக்கலை கல்லூரி தொடங்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

இது தமிழகத்தில் அமையவிருக்கும் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி ஆகும்.

இதேபோல் சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும் என்றும் உணவுப்பதப்படுத்துதல் என்ற தனி அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.